கோல் அடிக்காமல் மான்செஸ்ட் யுனைடெட் அதிர்ச்சி தோல்வி! பதிலடி கொடுத்த அர்ஜென்டினா வீரர்
ப்ரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 0-1 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் அன்ட் ஹோவ் ஆல்பியன் எப்.சி அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
சமபலத்துடன் மோதிய அணிகள்
இங்கிலாந்தின் பால்மெர் மைதானத்தில் நடந்த ப்ரீமியர் லீக் தொடர் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பிரைட்டன் அன்ட் ஹோவ் ஆல்பியன் எப்.சி அணிகள் மோதின.
இரு அணிகள் சமபலத்துடன் மோதியதால் 90 நிமிடங்கள் வரை கோல் ஏதும் விழவில்லை. அதனைத் தொடர்ந்து 5 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.
Image: Ryan Pierse/Getty Images
அப்போது மான்செஸ்டர் யுனைடெட் வீரரின் கையில் பந்து பட்டதால், பிரைட்டன் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
Image: Ryan Pierse/Getty Images
பெனால்டியில் கோல் அடித்த வீரர்
அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரைட்டன் அணி வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் அபாரமாக கோல் அடித்தார். இதன்மூலம் பிரைட்டன் அன்ட் ஹோவ் ஆல்பியன் எப்.சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.
புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள பிரைட்டனிடம் அணி, FA கோப்பை அரையிறுதியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியிடம் அடைந்த தோல்விக்கு தற்போது பழிதீர்த்துள்ளது.
Image: Getty Images
பிரைட்டன் அணியில் விளையாடும் அலெக்சிஸ் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர். 24 வயதாகும் அவர் பிரைட்டன் அணிக்காக 16 கோல்கள் அடித்துள்ளார்.
Image: Getty Images