ஹமாஸ் தாக்குதல் குறித்து விமர்சித்த இளம்பெண் விவகாரம்: பிரித்தானியாவுக்கு பின்னடைவு

Israel-Hamas War
By Balamanuvelan Oct 31, 2024 06:40 AM GMT
Report

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து பாலஸ்தீனிய மாணவி ஒருவர் தெரிவித்த கருத்துக்களுக்காக, அவரை நாடுகடத்த பிரித்தானியா திட்டமிட்டது.

ஆனால், அதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய, அவருக்கு ஆதரவாக தீர்ப்பாயம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

நடந்தது என்ன?

கடந்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1,200க்கும் அதிகமான இஸ்ரேலியர்களைக் கொன்றனர்.

அதற்கு மறுநாள், பிரித்தானியாவிலுள்ள மான்செஸ்டர் பல்கலையில் சட்டம் பயிலும் பாலஸ்தீனிய மாணவியான டானா (Dana Abuqamar, 19), பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்றில் கலந்துகொண்டார்.  

அந்தப் பேரணியில் உரையாற்றிய அவர், நடந்த விடயத்தால் நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளோம் என்று கூறினார். 

16 ஆண்டுகளாக காசா தாக்குதலுக்குள்ளாகிவரும் நிலையில், நவயுக வரலாற்றில், முதன்முறையாக இப்படி நடந்துள்ளது. 

ஹமாஸ் தாக்குதல் குறித்து விமர்சித்த இளம்பெண் விவகாரம்: பிரித்தானியாவுக்கு பின்னடைவு | Manchester University Student

Dana Abu Qamar

முதன்முறையாக அவர்கள் எதிர் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள், இது ஒரு வாழ்நாள் அனுபவம் என்று கூறிய டானா, இஸ்ரேல் எப்படி பதிலடி கொடுக்கும் என்ற பயம் எங்களுக்கு உள்ளது, அதே நேரத்தில், நாங்கள் மிகவும் கௌரவமாக உணர்கிறோம், நடந்ததை அறிந்து முழு மகிழ்ச்சியில் திளைக்கிறோம் என்று கூறினார். 

நாடுகடத்த முடிவு 

டானாவின் கருத்துக்களுக்காக அவரது மாணவர் விசாவை ரத்து செய்த பிரித்தானிய உள்துறை அலுவலகம், டானாவால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அறிவித்ததுடன், அவரை நாடுகடத்தவும் திட்டமிட்டது. 

மேல்முறையீடு

அரசின் நடவடிக்கைகள் குறித்து பேசிய டானா, தனது வார்த்தைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், பிரித்தானியா அரசு தனது மனித உரிமைகளை மீறிவிட்டதாகவும் கூறியிருந்தார். 

 தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், ஒரு 19 வயது வயது மாணவியான தான் பள்ளிக்குச் செல்வது, சமூக நீதிக்காக குரல் கொடுப்பது, தனது சமுதாயத்துக்கு மதிப்புமிக்க ஒருவராக இருக்க முயல்வது தவிர வேறொன்றும் செய்யவில்லை என்றும், தன்னைப்போய் பிரித்தானிய அரசு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறுவது அடிப்படையற்ற வாதம் என்றும் கூறியிருந்தார் அவர். 

ஹமாஸ் தாக்குதல் குறித்து விமர்சித்த இளம்பெண் விவகாரம்: பிரித்தானியாவுக்கு பின்னடைவு | Manchester University Student

அத்துடன், அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் டானா. 

பிரித்தானியாவுக்கு பின்னடைவு 

இந்நிலையில், டானா பிரித்தானியாவில் இருப்பதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறியதை நிரூபிக்க உள்துறை அலுவலகம் தவறிவிட்டதாக மேல் முறையீட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 

அத்துடன், உள்துறை அலுவலகத்தின் முடிவு, ஐரோப்பிய மனித உரிமை ஒப்பந்தத்தின் கீழ், டானாவின் பாதுகாக்கப்பட்ட பேச்சுரிமையில் விகிதாசாரமற்ற குறுக்கீடு என்றும் தீர்ப்பாயம் விமர்சித்துள்ளது. 

டானாவின் கருத்துக்கள், அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதலுக்கு ஆதரவானவை என எடுத்துக்கொள்ளமுடியாது என்றும் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 

12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Villejuif, France

09 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி, Zürich, Switzerland

04 Feb, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

25 Jan, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

22 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, ஆனைக்கோட்டை, London, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US