இங்கிலாந்து, பிரான்ஸ் வீரர்களின் கூட்டணி கோல்கள்..வெற்றி வாகை சூடிய மான்செஸ்டர் யுனைடெட்
இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் நாட்டிங்கம் ஃபாரெஸ்ட் அணியை வீழ்த்தியது.
மிரட்டிய இங்கிலாந்து - பிரான்ஸ் வீரர்கள்
ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் நடந்த போட்டியில் மான்செஸ்டர் மற்றும் நாட்டிங்கம் ஃபாரெஸ்ட் அணிகள் மோதின. ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் மான்செஸ்டரின் மார்க்கஸ் ராஷ்போர்ட் (இங்கிலாந்து) முதல் கோலை அடித்தார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று நிமிடங்களிலேயே சக வீரர் அந்தோணி மார்ஷியல் (பிரான்ஸ்) ஒரு கோல் அடித்தார். இதனால் 2-0 என்ற கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி முதல் பாதியில் முன்னிலை வகித்தது.
Twitter@ManUtd
மான்செஸ்டரின் அபார வெற்றி
அதன் பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் நாட்டிங்கம் ஃபாரெஸ்ட் வெற்றிக்காக போராடினாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால் மான்செஸ்டரின் பிரெட் 87வது நிமிடத்தில் கோல் அடித்தார். இறுதியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Twitter@ManUtd
@Getty Images