நாவூறும் சுவையில் மாங்காய் துவையல்.., எப்படி செய்வது?
இந்த சுவையான மாங்காய் துவையல் சாப்பிட அருமையாக இருக்கும்.
இதனை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் மாங்காய் துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மாங்காய்- 2
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு- 2 ஸ்பூன்
- உளுந்து பருப்பு- 2 ஸ்பூன்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- தனியா- 2 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 2 ஸ்பூன்
- பூண்டு- 4 பற்கள்
- சிவப்பு மிளகாய்- 20
- கல்லுப்பு- 1½ ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
- கடலைப்பருப்பு- 1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- பெருங்காயத்தூள்- ½ ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
முதலில் வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்து பருப்பு, வெந்தயம், தனியா, கடுகு, சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுத்து ஆறவிடவும்.
பின் பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தனி தனியாக வறுத்து ஆறவிடவும்.

அடுத்து இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் கல்லுப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
இதற்கடுத்து நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
பின்னர் வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், இடித்த பூண், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் மாங்காய் துவையலுடன் சேர்த்து கலந்தால் சுவையான மாங்காய் துவையல் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |