இனி கடைக்கு போக வேண்டாம்... வீட்டிலேயே Mango Ice Cream செய்யுங்க
பொதுவாகவே ஐஸ்க்ரீம் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். மழையோ வெயிலோ அனைத்து காலங்களிலும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது வழக்கம்.
இதை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். இதை நினைத்த நேரத்திற்கு சாப்பிட தான் முடியாது.
ஏனென்றால் உடனே வீட்டில் இருக்காது. ஆகவே வீட்டில் இருந்துக்கொண்டே எப்படி சுவையான மாங்காய் ஐஸ் க்ரீம் செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
மாம்பழ பல்ப் - 1 1/2 கப்
- பால் - 500 மி.லி
-
சர்க்கரை - 3/4 கப்
- கார்ன் பிளார்-2 ஸ்பூன்
- குங்குமப்பூ - 1 சிட்டிகை
-
மாம்பழ எசன்ஸ் - 1/2 ஸ்பூன்
- குல்ஃபிமோட்- 5, ஐஸ்க்ரீம் ஸ்டிக்ஸ்- 5
செய்முறை
முதலில் மாம்பழ தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெட்டிய மாம்பழத்துண்டுகளை ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்ததுக்கொள்ளவும்.
பின் ஒரு சிறிய கிண்ணத்தில் கார்ன் பிளார் சேர்த்து அதில் சிறிது பால் விட்டு கட்டி இல்லாமல் கரைத்து அதனை காய்ச்சிய பாலில் சேர்க்க வேண்டும்.
சிட்டிகை குங்குமப் பூ சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிக்கொள்ளவும்.
பால் ஆறியதும், மாம்பழ எசன்ஸ் ஒரு துளி சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.
இந்த கலவையை குளிரூட்டியில் வைத்து, தயார் ஆனதும் எடுத்து சாப்பிட்டால்,சுவையான மாம்பழ ஐஸ் க்ரீம் ரெடி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |