வெறும் 4 பொருட்கள் போதும்..., வீட்டிலேயே மாம்பழ ஐஸ்கிரீம் செய்யலாம்
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் அதன் தனித்துவமான நறுமணம் மற்றும் சுவைக்கு பெயர் பெற்றது.
மாம்பழம் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் E மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு, கண்பார்வையை மேம்படுத்தி, செரிமானத்தை சீராக்குகிறது.
மேலும், இது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது.
அந்தவகையில், குழந்தைகள் விரும்பி உண்ணும் மாம்பழ ஐஸ்கிரீம் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மாம்பழம்- 2
- பால்- 1 லிட்டர்
- கார்ன் ப்ளார்- 1 ஸ்பூன்
- சர்க்கரை- 150g
செய்முறை
முதலில் மாம்பழத்தை நன்கு கழுவி அதன் தோலை உரித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் பால் சேர்த்து மிதமாக சூடுபடுத்தவும்.

அடுத்து ஒரு கப் பாலில் கார்ன் ப்ளார் மாவு சேர்த்து கரைத்து சூடான பாலில் சேர்த்து கெட்டியான பதம் வரை கிளறி ஆறவைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மாம்பழம், ஆறவைத்த பால் கலவை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 3 மணி நேரம் பிரிட்ஜ் பிரீசரில் வைத்து எடுத்தால் சுவையான மாம்பழ ஐஸ்கிரீம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |