சுவையான மாங்காய் பால் பாயசம்: செய்வது எப்படி?
மாங்காய் புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த ஒரு காய் வகையாகும் . மாங்காயில் வைட்டமின் சி இருப்பதால் பல நோய்களை குணமாக்கும் தன்மையுடையது.
பொதுவாக வெயில் காலங்களில் மாங்காயின் விளைச்சல் அதிகமாக இருக்கும்.
மாங்காயில் மாங்காய் சாம்பார், மாங்காய் சாதம் ,மாங்காய் சட்னி, போன்றவற்றை செய்து சாப்பிட்டுருப்பீர்கள்.மாங்காயில் இனிப்பும் செய்யலாம்,புதிதாகவும் ஆச்சரியமாகவும் உள்ள மாங்காய் பாயசம் எப்படி செய்யவேண்டும் என்பதை பார்ப்போம்.
பாயசம் செய்ய பச்சை மாங்காய் அல்லது பழுக்க தொடங்கும் மாங்காய்களை இந்த பாயசம் செய்ய பயன்படுத்தவேண்டும்.
தேவையான பொருள்
- கிளி மூக்கு மாங்காய் – 5
- ஜவ்வரிசி – 1 கப்
- பால்- 3 லிட்டர்
- அரை லிட்டர் தண்ணீர்
- நெய்
- பாதாம் – 25 கிராம்
- முந்திரி- 25 கிராம்
- திராட்சை : 15 கிராம்
- சர்க்கரை – 1 கப்
- ஏலாக்காய் இடித்தது
செய்முறை
மாங்காயை நன்றாக கழுவி,தோலை முழுவதுமாக நீக்கி பின் துருவி எடுத்துக்கொள்ளவும்.ஜவ்வரிசியை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் பாலை மற்றும் தண்ணீர் ஊற்றி பாதியளவு வரும்வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
tasted recipes
ஜவ்வரிசியையும் சேர்த்து நன்றாக வேகவிடவேண்டும்.பின் மாங்காய் துருவலை சேர்த்து 10 நிமிடத்திற்கு நன்றாக கொதிக்க விட வேண்டும்.
தேவையான அளவிற்கு சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.சர்க்கரை நன்றாக கரைந்ததும் துருவிய பாதாமை சேர்த்து கொள்ளவும்.
கடைசியாக நெய்யில் முந்திரி,திராட்சையை வறுத்து பாயசத்தில் சேர்த்தால் சுவையான மாங்காய் பாயசம் தயார் .
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |