அடுப்பில்லாமல் செய்யும் சுவையான மாம்பழ பாயசம்: ரெசிபி இதோ!
மாம்பழத்தை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள்.
மாம்பழம் சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, செரிமான அமைப்பு மற்றும் குடல்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
இது தவிர, மாம்பழம் கண்கள், முடி மற்றும் சருமத்திற்கும் நன்மை தருவதாகும்.
மாம்பழத்தை வைத்து அடுப்பை பயன்படுத்தாமல் சுவையான மாம்பழ பாயசம் எப்படி செய்வதென்று பார்ப்போம்?
தேவையான பொருட்கள்
- மாம்பழம்-3
- தேங்காய் பால்-2கப்
- ஏலக்காய் தூள்-1 டீஸ்பூன்
- குங்கும பூ- சிறிதளவு
- வெல்லம்-1கப்
- பாதம்-10
- உப்பு-சிறிதளவு
செய்முறை
தோல் சீவிய மாம்பழத்தை எடுத்து கைகளிலே நன்கு பிசைந்து அதன் கொட்டையை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
பின் அதில் அரைத்து வடிகட்டிவைத்த தேங்காய்ப்பாலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும்.
அடுத்து அதில் ஏலக்காய் தூள், குங்கும பூ, சேர்த்து கலக்க வேண்டும்.
இதனைத்தொடர்ந்து அதில் வெல்லத்தை இடித்து சேர்த்து கொள்ளவேண்டும்.
வெள்ளம் கரைந்ததும் அதில் உப்பு சிறிதளவு சேர்த்து பாதாமை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின் மாம்பழத்தை சிறுது சிறிதாக நறுக்கி அதில் சேர்த்து பரிமாறினாள் சுவையான மாம்பழ பாயசம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |