வேலையை உதறிய பின் கோடிகளில் கொட்டும் பணம்! ஐரோப்பாவிலும் சாதிக்கும் தமிழ் தம்பதி
வெளிநாட்டில் இருந்து ஊருக்கும் திரும்பிய சென்னை தம்பதி மாம்பழம் விற்பனையில் புதிய புரட்சியை நடத்தி கோடிகளில் வருமானம் ஈட்டுகின்றனர்.
’மேங்கோ பாயிண்ட்’ (MangoPoint) என்பது மாம்பழங்களை ஏற்றுமதி செய்யும் சென்னை நிறுவனம். திருவள்ளூர் அருகே ஒரு ஆலை அமைத்து அங்கு பழங்களை வரிசைபடுத்தி ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்கள்.
இந்த நிறுவனத்தில் சென்னை ஏஞ்சல்ஸ் , நேட்டிவ் ஏஞ்சல் நெட்வோர்க், கெய்ருட்சு ஆகிய நிறுவனங்கள் இணைந்து 1.82 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கின்றன.
தற்போது ஐரோப்பாவுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியும் இவர்களுக்கு கிடைத்திருக்கிறது.
பிரசன்னா வெங்கடரத்தினம் மற்றும் மஞ்சுளா காந்தி ரூபன் இணையர் தொடங்கி நடத்தும் நிறுவனம் தான் இந்த மேங்கோ பாயிண்ட்.
இருவரும் அமெரிக்காவில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2018ல் இந்தியா வந்தனர்.
#Chennai based @mangopointindia has secured rights to export mangoes to Europe and other nations-The 1st consignment of mangoes to Europe reached Frankfurt this week and the first consignment to US has arrived and hit the stores in the Bay Area, the company says pic.twitter.com/pSJeugt2VJ
— Sindhu Hariharan (@sindhuhTOI) May 23, 2022
பின்னர் தான் இயற்கையாக பழுக்க வைக்கும் மாம்பழ வியாபாரம் செய்ய முடிவெடுத்தனர். அதை செய்தும் காட்டி இன்று ஒரு சாம்ராஜ்யமே நடத்துகின்றனர்.
பிரசன்னா வெங்கடரத்தினம் மற்றும் மஞ்சுளா காந்தி ரூபன் தம்பதி கூறுகையிlல், 2021ம் நிதி ஆண்டில் சுமார் 1.75 கோடி ரூபாய் அளவுக்கு மாம்பழ விற்பனை செய்துள்ளோம்.
கடந்த நிதி ஆண்டில் 3.15 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்தோம். நடப்பு நிதி ஆண்டில் சுமார் 8 கோடி அளவுக்கு வருமானம் நிர்ணயம் செய்திருக்கிறோம் என நம்பிக்கையோடு கூறுகின்றனர்.
Chef Koushik (@themadchefindia) is an adept man at weaving his creativity through food. An innovator at heart, his recent beer rasam has captured the attention of food connoisseurs all over the nation.
— MangoPoint (@mangopointindia) April 17, 2022
👇thread pic.twitter.com/BUIRMj3eT7