நாவூறும் சுவையில் மாங்காய் ரசம்.., எப்படி செய்வது?
மதிய வேளையில் உண்ணும் உணவுகள் ஜீரணம் ஆவதற்கு ரசம் பெரிதும் உதவுகின்றது.
ரசத்தில் பருப்பு ரசம், தக்காளி ரசம், லெமன் ரசம், மிளகு ரசம், எலும்பு ரசம் என்று ரசத்தில் பல வகைகள் உள்ளன.
அந்தவகையில், நாவூறும் சுவையில் மாங்காய் ரசம் எப்படி செய்வது என்று பாரக்கலாம்.
தேவையான பொருட்கள்
- மாங்காய்- 1
- பச்சைமிளகாய்- 3
- இஞ்சி- 1 துண்டு
- துவரம் பருப்பு- 1 கப்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- பெருங்காயம்- 1 சிட்டிகை
- காய்ந்தமிளகாய்- 2
- பூண்டு- 5 பல்
- கறிவேப்பிலை- 1கொத்து
- ரச பொடி- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கொத்தமல்லி- 1 கைப்பிடி
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் மாங்காய், பச்சைமிளகாய், இஞ்சி, துவரம் பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, பெருங்காயம், காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் வேகவைத்து மசித்த கலவை மற்றும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

பின் இதில் ரச பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.
இறுதியாக இதில் கொத்தமல்லி இலை தூவி கலந்து இறக்கினால் சுவையான மாங்காய் ரசம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |