பிரித்தானியாவில் பொலிஸாரிடம் இருந்து தப்பிய 22 வயது கைது: தேடுதல் வேட்டை தீவிரம்
பிரித்தானியாவில் காவல்துறையினரிடம் இருந்து தப்பிய 22 வயது இளைஞரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய குற்றவாளி
பிரித்தானியாவின் லிவர்பூல் நகரில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவதற்கு முன்பு காவல் நிலையத்தில் இருந்து 22 வயது இளைஞர் தப்பியோடினார்.
அதிகாரிகள் வழங்கிய தகவலில், சந்தேக நபரான ஸ்டீபன் கிரிசிப்(Stephen Grzyb) சனிக்கிழமை காலை லிவர்பூல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்ற போது தப்பியோடியதாக தெரிவித்துள்ளனர்.

பிரின்சஸ் டிரைவ் பகுதியை சேர்ந்த சந்தேக நபரான ஸ்டீபன் கிரிசிப், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்தார்.
தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வாகனமான GEOAmey-வில் அழைத்து வரப்பட்ட ஸ்டீபன், காவல்துறையினரிடம் இருந்து தப்பி ரெட் கிராஸ் தெரு வழியாக மெர்சி நதியை ஒட்டிய தி ஸ்ட்ராண்ட் பகுதியை நோக்கி ஓடியதாக காவல்துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் வேட்டை தீவிரம்
இந்நிலையில் தப்பியோடிய ஸ்டீபன் கிர்சிபை பிடிக்க மெர்சிசைடு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கைக்கு உதவும் விதமாக, சந்தேக நபரான கிர்சிப்பின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
லிவர்பூல் முழுவதும் தீவர விசாரணை நடந்து வருவதுடன், முன்னெச்சரிக்கையாக கிர்சிப்பின் வீட்டிற்கும் காவல்துறை பாதுகாப்பு போட்டுள்ளது.
மேலும் கிர்சிப் குறித்த தகவல் பொதுமக்கள் யாருக்கும் கிடைத்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |