லண்டன் பேருந்தில் 15 வயது சிறுவன் பக்கத்தில் உட்கார்ந்து பாலியல் தாக்குதல் நடத்திய நபர்! குற்றவாளியை புகைப்படம் எடுத்த சிறுவன்
லண்டன் பேருந்தில் 15 வயது சிறுவனிடம் மீது கை வைத்து பாலியல் தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் தேடி வருகிறார்கள்.
கிழக்கு லண்டனில் சென்று கொண்டிருந்த பேருந்தில் தான் இந்த சம்பவம் கடந்த 2ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு நடந்துள்ளது. அதன்படி பள்ளி சீருடையில் இருந்த மாணவனை பின் தொடர்ந்து சென்ற நபர் ஒருவர் பேருந்தில் அவன் அருகில் சென்று உட்கார்ந்திருக்கிறார்.
பின்னர் பாலியல் ரீதியான உரையாடலில் சிறுவனிடம் அவர் ஈடுபட்ட போது அவன் புறக்கணித்துள்ளான். பின்னர் சிறுவன் மீது கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அப்போது அந்த நபரை தனது செல்போனில் புகைப்படம் எடுத்த சிறுவன் பேருந்தில் இருந்து இறங்கி சென்று தனது தாயிடம் அனைத்தையும் கூற அவர் மூலம் பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது.
தற்போது சிறுவன் எடுத்த புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டு அந்த நபரிடம் சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
அவரின் வயது 35க்குள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நீங்கள் எதையும் அறிந்திருந்தால் அல்லது பார்த்தால், அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்.
தயவு செய்து அதை முன் வந்து எங்களிடம் சொல்லுங்கள்.
இந்த நபரை நாம் அடையாளம் காண்பது மிக முக்கியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.