டொனால்டு ட்ரம்ப் உயிருக்கு மீண்டும் அச்சுறுத்தல்... சந்தேக நபருக்கு வலைவீச்சு

Donald Trump Kamala Harris
By Arbin Aug 23, 2024 03:25 AM GMT
Report

சமூக ஊடகத்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த அரிசோனா மாகாண நபர் மீது பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொலை மிரட்டல்

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களம் காணும் டொனால்டு ட்ரம்ப், பரப்புரையின் ஒரு பகுதியாக மெக்சிகோ மற்றும் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள Cochise மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.

டொனால்டு ட்ரம்ப் உயிருக்கு மீண்டும் அச்சுறுத்தல்... சந்தேக நபருக்கு வலைவீச்சு | Manhunt In Arizona Threatened To Kill Trump

இந்த நிலையிலேயே 66 வயதான Ronald Lee Syvrud என்பவர் ட்ரம்புக்கு எதிராக சமூக ஊடகத்தில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஏற்கனவே விஸ்கான்சின் மாகாணத்தில் குறித்த நபருக்கு எதிராக பல்வேறு கைதாணைகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

தன் மீதான கொலை மிரட்டலுக்கு பதிலளித்துள்ள டொனால்டு ட்ரம்ப், மோசமான நபர்களுக்கு எதிராக தான் செயல்பட முடிவு செய்துள்ளதால், அவர்களால் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதில் வியப்பில்லை என்றார்.

நவம்பர் 5ம் திகதி தேர்தல் முன்னெடுக்கப்படும் நிலையில், ட்ரம்ப் மீது விடுக்கப்படும் இன்னொரு அச்சுறுத்தல் இதுவென கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை அச்சுறுத்தியதாக வர்ஜீனியா நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

அளவுகடந்த மரியாதை

மேலும், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதற்காக நியூ ஹாம்ப்ஷயர் நபர் ஒருவர் டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.

டொனால்டு ட்ரம்ப் உயிருக்கு மீண்டும் அச்சுறுத்தல்... சந்தேக நபருக்கு வலைவீச்சு | Manhunt In Arizona Threatened To Kill Trump

ஜூலை மாதம், ட்ரம்ப் மீது முன்னெடுக்கப்பட்ட கொலை முயற்சியில் இருந்து அவர் நூலிழையில் தப்பியுள்ளார். அந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர் மற்றும் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், தன் மீது கொலை மிரட்டல் விடுக்கபப்ட்டுள்ளதும், படுகொலையில் இருந்து தப்பியுள்ளதையும் குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீது தமக்கு அளவுகடந்த மரியாதை உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US