விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: நாவூறும் சுவையில் மணி கொழுக்கட்டை.., 15 நிமிடத்தில் செய்யலாம்
பண்டிகை காலங்கள் என்றால் உடனே நாம் செய்யக்கூடியது இனிப்பு தான்.
அதிலும் விநாயகர் சதுர்த்தி என்றால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை செய்வோம்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் மணி கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மா- 1 கப்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- தேங்காய்- 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 4
- பச்சைமிளகாய்- 1
- கடுகு- ½ ஸ்பூன்
- உளுந்து- 1 ஸ்பூன்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- சீரகம்- ½ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 2
- பெருங்காயத்தூள்- ¼ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மா, உப்பு சிறிதளவு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து சுடு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிணைந்து 5 நிமிடம் மூடி போட்டு அப்படியே வைக்கவும்.
பின் இதனை சிறிய சிறிய உருண்டயாக உருட்டி இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சைமிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு வாணல் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்.
இதனையடுத்து இதில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி தொடர்ந்து வேகவைத்த உருண்டைகளை சேர்த்து கிளறவும்.
இறுதியாக இதில் கொரகொரப்பாக அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கலந்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் மணி கொழுக்கட்டை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |