கரூர் விபத்தின் போது விஜய்க்கு ராகுல் காந்தி சொன்ன அறிவுரை - மாணிக்கம் தாகூர் பேச்சு
manickam tagore says rahul gandhi advised vijay while karur incident: கரூர் விபத்தின் போது விஜய்யை முதல் ஆளாக அழைத்து ராகுல் காந்தி அறிவுரை கூறியதாக மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார்.
விஜய்க்கு ராகுல் காந்தி சொன்ன அறிவுரை
புதுக்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டு பேசினார்.
இதில் பேசிய அவர், "நம்முடைய ஆட்சி நடக்கிறது. நம் அமைச்சர்கள் இருக்கிறார்கள். விஜய் அவர்களுக்கு எந்த நேரத்தில் எல்லாம் ஆதரவு தேவைப்பட்டதோ அப்போது இருந்தது ராகுல்காந்தி என்பதை மறந்துவிட வேண்டாம்.

ராகுல் காந்தி விஜய் அவர்களை சகோதரனாக பார்க்கிறார். கரூர் விபத்து நடந்தது. இந்தியாவில் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டும்தான் விஜய் உடன் பேசினார்.
அப்போது பேசியவர் எனக்கும் இதே போன்று பெரிய இழப்புகள் நடந்துள்ளது. எனது அன்புக்குரியவர்களை என் கண் முன்னால் இழந்துள்ளேன். அதற்காக நான் வீட்டில் உட்காரவில்லை. நீ அவர்களுடன் போய் நில் என்று கூறினார்.
காங்கிரஸில் சேர நினைத்த விஜய்
அடுத்து விஜய் அனைவரையும் சந்திக்க தொடங்கினார். எப்போது எல்லாம் விஜய்க்கு கஷ்டம் வந்துள்ளதோ கூட நின்ற ஒரே கட்சி காங்கிரஸ்தான்.

தவெக ஆட்சியமைக்க 15 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்பட்ட போது, முதல் கட்சியாக ஆதரவு கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான். ஆதரவு பற்றி யோசித்த கட்சிகளும் அதன் பின்னர் அந்த நிலையை எடுத்தன. இதனை நாம் மறக்க வேண்டாம். அவர்களும் மறக்க மாட்டார்கள்.
ஏனென்றால் ஒரு காலத்தில் விஜய் காங்கிரஸில் சேர வேண்டுமென நினைத்தார். ஆனால், நம்முடைய தலைவர்கள் தான் அதனை தடுத்துவிட்டனர்" என பேசியுள்ளார்.