கோடிக்கணக்கில் ஐபிஎல் ஏலத்தில் போகவுள்ள தமிழக வீரர்!
ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கில் ஏலத்திற்கு போவார் என எதிர்பார்க்கப்படும் தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது அபார பந்துவீச்சால் எதிரணியை திணறடித்துள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடக அணி, 122 ரன்களில் சுருண்டது.
23 வயதான தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இடது கை சுழற்பந்துவீச்சாளரான அவர் 4 போட்டிகளில் 10 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.
இதனால் வரும் ஐபில் ஏலத்தில் கோடி ரூபாய்க்கு மேல் விலை போவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடரில் இவரை ஏற்கனவே கொல்கத்தா, டெல்லி அணிகள் வாங்கியும் பயன்படுத்தவில்லை.
இதனால் இவரை மீண்டும் கைப்பற்ற இவ்விரு அணிகள் மட்டுமின்றி வேறு அணிகளும் போட்டி போடும்.
இந்த இலக்கை தமிழக அணி 28 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது குறிப்பிடத்தக்கது.