டோனி ஆலோசனை தான் இதற்கு காரணம்! இந்திய அணி ட்ரெஸ்ஸிங் அறையில் நடந்த குழப்பம்... ரகசியம் உடைத்த பிரபல வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் நிறைய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் அது தொடர்பான விபரங்களை பிரபல வீரர் உடைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் களமிறங்கிய நிலையில் இந்திய வீரர்கள் விளையாடும் விதம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக மோசமாக தோல்வி அடைந்த இந்திய அணி அரையுறுதிக்கு செல்வது கொஞ்சம் சிக்கலாகி உள்ளது. இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வென்ற நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளில் 60+ ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில்தான் இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக முன்னாள் வீரர் மனீந்தர் சிங் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள கருத்தில், இந்திய வீரர்கள் ஒரு வித அச்சத்தோடு ஆடி வருகிறார்கள். ஏதாவது செய்து வெற்றிபெற வேண்டும் என்று முயன்று அடுத்தடுத்து தவறுகளை செய்து வருகிறார்கள்.
இந்திய அணியின் பிளானிங்கில் எதோ தவறு இருக்கிறது. பிளானிங் ஓப்பனிங் இறங்கி நன்றாக ஆடும் ரோஹித் நியூசிலாந்துக்கு எதிராக ஓப்பனிங் இறங்கவில்லை. அதேபோல் 3வது இடத்தில நன்றாக ஆடும் கோலி 4வது இடத்தில் இறங்கினார். இப்படி இந்திய அணி எடுத்த முடிவுகளில் நிறைய தவறுகள் உள்ளது. நிறைய குழப்பங்கள் வெளிப்படையாக தெரிய தொடங்கி உள்ளது.
டோனியின் ஆலோசனை, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இரண்டு சீனியர் வீரர்கள் காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டது என்று நினைக்கிறேன். ட்ரெஸ்ஸிங் ரூமில் குழப்பம் ஏற்பட்டது வெளிப்படையாக தெரிகிறது.
கோலி - டோனி - ரவி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசி ஒரு முடிவிற்கு வர வேண்டும். தேவை இல்லை அணியில் ஏற்கனவே பயிற்சியாளர் இருக்கிறார். அப்படி இருக்கும் போது டோனி ஏன்? பயிற்சியாளர் தான் ஆலோசகர். இப்படி இருக்கும்போது கூடுதலாக ஆலோசனை வழங்க ஒருவரை கொண்டு வந்துதான் தவறாக சென்றுவிட்டது என கூறியுள்ளார்.