மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்; ஆபத்தான நிலையில் 18 வயது பெண்
மணிப்பூரில் மீண்டும் கூட்டு பலாத்காரம். 18 வயது இளம் பெண்இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இச்சம்பவம் கடந்த மே மாதம் 15-ஆம் திகதி இம்பாலில் கிழக்கில் இடம்பெற்றுள்ளது. பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த பெண்ணை ஆயுதமேந்திய கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமி ஆபத்தான நிலையில் நாகாலாந்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில், நான்கு பேரால் காரில் கடத்தப்பட்ட சிறுமி, 'மீரா பைபிஸ்' என்ற பெண்கள் அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர்கள் சிறுமியை ஆயுதம் ஏந்திய நான்கு பேரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.
The Quint
இரண்டு குக்கி பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
பலத்த காயம் அடைந்த சிறுமி அண்டை மாநிலமான நாகாலாந்தில் சிகிச்சை பெற்று வந்தார். திரும்பி வந்து காங்போபி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு இம்பால் கிழக்கு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக, 18 வயது பெண் ஒருவர் புகார் அளிக்க முன்வந்தார்.
அதேநேரம் மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக சாலையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் மேலும் இருவரை பொலிஸார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் 4 பேரை பொலிஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்கள் வெள்ளிக்கிழமை 11 நாள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டனர். 19 வயதுடைய இளைஞரும், மைனர் ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Manipur Video, Manipur women paraded naked video, Manipur Viral Video, Manipur Shameful Video, Manipur Horror, Manipur Violence