"மணிப்பூர் என்பதை கரீனா கபூர் என்று மோடி நினைத்து விட்டார்" - காங்கிரஸ் தலைவர் பவன் கேரா விமர்சனம்
கரீனா கபூர் குடும்பத்தை சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பவன் கேரா விமர்சனம்
ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் கரிஷ்மா கபூர் உள்ளிட்ட கபூர் குடும்பத்தினர், ராஜ் கபூரின் 100வது பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் கபூரின் திரைப்பட விழாவிற்கு அவரை அழைக்க பிரதமர் மோடியை சந்தித்தனர்.
அதன்படி கரீனா கபூர் கணவர் சைஃப் அலி கான், சகோதரர் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் சகோதரி கரிஷ்மா கபூர் உள்ளிட்ட அவரது குடும்பத்துடன் சந்திப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
இந்நிலையில் கரீனா கபீர் குடும்பத்தை சந்தித்த பிரதமர் தோடியை காங்கிரஸ் தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "நாங்கள் மணிப்பூர் என்று சொன்னதை பிரதமர் மோடி கரீனா கபூர் என்று நினைத்து விட்டார் போல" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்தாண்டு மே மாதம் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் இதுவரையில் 200 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
எனவே பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லவில்லை. எனவே பிரதமர் தோடியை காங்கிரஸ் தலைவர் பவன் கேரா இவ்வாறு விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |