1638 கிரெடிட் கார்டு பயன்படுத்தியும் கடன் இல்லாத மனிதர் - எப்படி பணம் சேமிக்கிறார்?
இந்தியாவில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், கடனில் சிக்கிக்கொள்வோம் என பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த தயங்கி வருகின்றனர்.
ஒரு சிலர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வந்தாலும், 2 அல்லது 3 கிரெடிட் கார்டுகள் தான் வைத்திருப்பார்கள்.
1638 கிரெடிட் கார்டுகள்
ஆனால், மனிஷ் தாமேஜா(manish dhameja) என்ற இந்தியர் 1638 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, அதிக கிரெடிட் கார்டுகள் வைத்துள்ள நபர் என்ற கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.
இத்தனை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும் அவருக்கு ஒரு ரூபாய் கூட கடன் இல்லை என்பது தான் ஆச்சரியப்படத்தக்க விடயம்.
அவர் இந்த கிரெடிட் கார்டுகளை வெறும் சாதனைக்காகவோ அல்லது ஆடம்பரமாக செலவு செய்வதற்காகவோ பயன்படுத்தவில்லை.
மாறாக இந்த கிரெடிட் கார்டுகளின் விதிகளை முழுமையாக புரிந்து கொண்டு அதனை ஒரு பணத்தை மிச்சப்படுத்தும் சாதனமாக பயன்படுத்தி வருகிறார்.
எந்த கிரெடிட் கார்டுக்கு கேஷ்பேக் கிடைக்கும், எந்த கிரெடிட் கார்டுக்கு இணையத்தில் பொருள் வாங்கும் போது தள்ளுபடி கிடைக்கும் என கவனமாக பயன்படுத்தி வருகிறார்.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த மணீஷ், தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். மனீஷ் ஒரு இளங்கலை பட்டமும், 4 முதுகலை பட்டமும் படித்து இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வருகிறார்.
இத்தனை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினாலும் மணீஷ் தன்னுடைய சிபில் ஸ்கோரை சரியாக பராமரித்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |