திருமணத்தில் கூட உருவக்கேலிக்கு ஆளானேன்: சமீபத்தில் கார்த்திக் மகனை மணந்த நடிகை மஞ்சுமா
திருமணத்தன்றும் நான் உருவக்கேலிக்கு ஆளானேன் என நடிகை மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.
மஞ்சிமா மோகன்
நடிகை மஞ்சிமா மோகனும், கவுதம் கார்த்திக்கும் தேவராட்டம் என்ற படத்தில் இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டு சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
மஞ்சிமா மோகன் பொதுவாக உயரம் குறைவாகவும், எடை கூடுதலாவும் கொண்ட உடலமைப்பு கொண்டவர். இதனால் அவர் நடிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே உருவக்கேலிக்கு ஆளாகி வருகிறார்.
உடல் எடை குறித்து கேலி
இடையில் உடல் எடை குறைத்தும் சில படங்களில் நடித்தார். இடையில் சில காலம் நடிப்புக்கு பிரேக் விட்டதில் மீண்டும் எடை கூடிவிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தனது திருமணத்தில்கூட நேரடியான உருவக்கேலிக்கு ஆளானதாக அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக திருமணத்திற்கு பிந்தைய நேர்காணல் ஒன்றில் சமூக வலைத்தளங்களில் மட்டும் நான் உருவகேலிக்கு ஆளாகவில்லை. எனது திருமணத்தன்றும் நான் உருவக்கேலிக்கு ஆளானேன். அதை நான் பொருட்படுத்தவில்லை.
தேவைப்படும் நேரத்தில் உடல் எடையை குறைக்கவும் என்னால் முடியும், எனது உடல் எடையில் நான் சவுகரியமாகவே இருப்பதாக கூறியுள்ளார்.