நடிகை மஞ்சு உயிருக்கு ஆபத்து! அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை... பிரபல இயக்குனர் பரபரப்பு தகவல்
பிரபல நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குனர் சணல் குமார் சசிதரன் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் திலீப், நடிகை பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அவருடைய முன்னாள் மனைவியான, பிரபல நடிகை மஞ்சு வாரியரிடமும் இது தொடர்பாக விசாரணை நடந்துள்ளது.
மஞ்சு வாரியர் அசுரன் என்ற தமிழ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகையான மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரபல இயக்குனர் சணல் குமார் சசிதரன் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,நடிகை மஞ்சு வாரியரை கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே பதிவிட்டிருந்தேன்.
மஞ்சு வாரியரின் மேலாளர்கள் சிலரின் பெயரையும் நான் குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய பதிவுகளுக்கு மஞ்சு வாரியர் பதில் அளிக்கவில்லை. அதனால், என்னுடைய சந்தேகம் அதிகரித்துள்ளது.
யாரோ சிலரின் கட்டுப்பாட்டில் மஞ்சு வாரியர் இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து உள்ளது என கூறியுள்ளார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        