பொருளாதார சீர்திருத்த சிற்பியின் மறைவு: கருப்புப்பட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவிற்கு, மரியாதை செலுத்தும் வகையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) இந்திய வீரர்கள் கருப்புக் பட்டி அணிந்து விளையாடி வருகின்றனர்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92வது வயதில் காலமானார்.
சிங் இந்தியாவின் நீண்ட காலம் பணியாற்றிய பிரதம மந்திரிகளில் ஒருவராக இருந்தார், மேலும் அவர் 2004-2014 முதல் பிரதமராகவும் அதற்கு முன் நிதி அமைச்சராகவும் முக்கிய தாராளமயமாக்கல் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பியாக கருதப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல அரசியல் தலைவர்களும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவிற்கு, மரியாதை செலுத்தும் வகையில் இந்திய வீரர்கள் கருப்புக் பட்டி அணிந்து விளையாடி வருகின்றனர்.
கருப்புப்பட்டியில் இந்திய வீரர்கள்
ஆஸ்திரேலியாவில் பாடர் - காவஸ்கர் டெஸ்ட்ட தொடரில் இந்நிய அணி விளையாடி வருகின்றனது. குறித்த தொடரின் 4வது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று அதிகாலையில் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், நேற்று காலமான இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியினர் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) X இல் பதிவிட்டுள்ளது.
The Indian Cricket Team is wearing black armbands as a mark of respect to former Prime Minister of India Dr Manmohan Singh who passed away on Thursday. pic.twitter.com/nXVUHSaqel
— BCCI (@BCCI) December 27, 2024
அவரது மறைவைத் தொடர்ந்து, யுவராஜ் சிங், ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், கவுதம் கம்பீர் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களில் முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |