லண்டன் இரயிலில் சக பயணி முன்னால் அநாகரீக செயலை செய்த நபர்! சிசிடிவி புகைப்படத்துடன் பொலிசார் முக்கிய கோரிக்கை
லண்டன் இரயிலில் சக பயணி முன்னர் உடைகளை களைந்து அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் தொடர்பிலான தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
Hounslowவில் உள்ள Underground இரயிலில் தான் இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி நடந்துள்ளது.
அதன்படி பகல் 1.30 மணியளவில் இரயிலில் ஏறிய நபர் எதிரில் உட்கார்ந்திருந்த பயணியின் முன்னால் தனது உடைகளை களைந்து அநாகரீகமாக நடந்திருக்கிறார் என பொலிசார் கூறியுள்ளனர்.
அந்த சமயத்தில் அந்த இரயில் பெட்டியில் வேறு யாருமே இல்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இதில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அவரிடம் விசாரித்தால் இந்த சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என பொலிசார் கருதுகின்றனர்.
மேலும் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள நபர் குறித்தோ அல்லது சம்பவம் தொடர்பாகவோ யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
