அடப்பாவிகளா! திடீர்ன்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு..சர்ச்சைக்கு மன்சூர் அலி கான் விளக்கம்
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோவுக்கு மன்சூர் அலி கான் விளக்கம் அளித்துள்ளார்.
திரிஷா கண்டனம்
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் மன்சூர் அலி கான் பேசிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்து பதிவிட்டார்.
அவருக்கு ஆதரவாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் மன்சூர் அலி கானை கண்டித்து ட்வீட் செய்தனர்.
இந்த நிலையில் திரிஷா குறித்து பேசியதற்கு மன்சூர் அலி கான் விளக்கம் அளித்துள்ளார்.
மன்சூர் அலி கானின் விளக்கம்
அவர் தனது சமூக வலைதள பதிவில், 'அய்யா பெரியோர்களே. திடீர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவி விட்டுருக்கானுக.
உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஞ்சீவி மலையகையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பிக் கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன்.
அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நினைச்சா, நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா. திரிஷா கிட்ட தப்பா வீடியோவ கட்டிருக்காங்க. அய்யா என் கூட நடிச்சவங்கள்லாம் MLA, MP மந்திரின்னு ஆயிட்டாங்க பல கதாநாயகிகள். பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க.
மேலும், லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய Fanனுன்னு சொன்னேன். இன்னும் 2 பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணனும், 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும்.
சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்கிட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது. உலகத்துல எத்தனையோ பிரச்சன இருக்கு...பொழப்ப பாருங்கப்பா....நன்றி. மன்சூரலிகான்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |