வாங்க பாலஸ்தீனத்திற்கு விடுதலை வாங்கி கொடுக்கலாம்! லோகேஷ் கனகராஜை வம்பிழுத்த நடிகர் மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான் லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாலஸ்தீன போருக்கு அழைத்தது பேசு பொருளாகியுள்ளது.
லியோ
கடந்த 19ஆம் திகதி நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியானது.
இதில் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், தனக்கு சிறிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதாக தற்போது மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது அரசியல் சார்ந்த விடயங்களையும் உள்ளே இழுத்துவிட்டுருக்கிறார்.
அவர், 'ரூ.500 கோடி முதல்போட்டு, லட்சம் பேருக்கு வேலை கொடுத்து, ஒன்றரை வருடம் பாடுபட்டு ரூ.1000 கோடி வசூலுக்கு உழைக்கிறோம். ஆனால், அரசியல்வாதி ஒரு கையெழுத்து போட்டுட்டு, ரூ.10,000 கோடி, 20,000 கோடி ஆட்டைய போட்டுடுறாங்க. லோகேஷ், என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம். அதனை விட்டுவிட்டு சிறிய கதாபாத்திற்கு அவ்வளவு பெரிய பில்டப் கொடுத்திருக்கிறார்' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 'அப்படி இல்லையென்றால் வாங்க பாலஸ்தீனத்திற்கு விடுதலை வாங்கி தரலாம். 500 இராணுவ டேங்கர், 500 Armed Air-Craft எடுத்துக் கொண்டு வாருங்கள். போருக்கு போய் எல்லா இராணுவ தளத்தையும் அழிச்சுட்டு வரலாம். அப்பாவிங்க சாகுறாங்க. சும்மா டம்மி துப்பாக்கி, அட்டகத்திய கையில் கொடுத்துக்கிட்டு; வாங்க, போருக்கு போகலாம் லோகேஷ்' என தெரிவித்தார்.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சு திரையுலகில் பேசுபொருளானது மட்டுமல்லாமல், இணையத்திலும் வைரலாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |