குஷ்பு, திரிஷா மற்றும் சிரஞ்சீவி மீது மானநஷ்டவழக்கு! நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு
நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மன்னிப்பு அறிக்கை
மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விடயத்தில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு காவல் நிலையம் சென்றார்.
அதனைத் தொடர்ந்து திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இதற்கிடையில் மன்சூர் அலிகானை கண்டித்து குஷ்பு உட்பட பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர்.
மானநஷ்ட வழக்கு
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மீது மன்சூர் அலிகான் மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பில், 'திரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகிய மூவர் மீதும் கிரிமினல், பொது அமைதியை கெடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் நாளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |