மலேசிய பெருந்தமிழர் திரு.பெருமாள் இராஜேந்திரன் அவர்களின் மந்திரக்கணங்கள் நூல் சுவிஸில் அறிமுகம்!
மலேசிய பெருந்தமிழர் திரு.பெருமாள் இராஜேந்திரன்அவர்களின் மந்திரக்கணங்கள் நூல் அறிமுகம் சுவிஸின் வர்த்தகத்தலைநகராம் சூரிச்சில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மலேசியாவின் மக்கள் ஓசை நாளிதழின் மேனாள் ஆசிரியரும்,மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் தலைவரும்,சங்கத்தின் அயலகத் தொடர்புக்குழுத் தலைவருமாகத் திகழும் பெருந்தமிழர் திரு.பெருமாள் இராஜேந்திரன் அவர்கள் எழுதிய “மந்திரக் கணங்கள்” எனும் நூலின் அறிமுகவிழா சுவிஸின் முக்கிய ஆளுமை மிக்க பிரமுகர்கள் முன்னிலையில் மிகப் பிரமாண்டமாகவும்,சிறப்பாகவும் நடைபெற்றது.
தமிழுக்காக உயிர் நீர்த்த மக்களுக்காகவும்,இந்த விழாவில் கலந்துகொள்ள இருந்து மறைந்த தொழிலதிபர் அமரர்.வேலா வரதனுக்காகவும் மெளனாஞ்சலியுடன் விழா தொடங்கப்பட்டது.
விழாவை ஏற்பாடு செய்த சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவர் கல்லாறு சதீஷ் சரியாகக் குறிப்பிட்ட நேரம் காலை 10:15 இற்கு விழாவை ஆரம்பித்து வைத்தார்.
சுபீட்சம் பத்திரிகையின் அதிபர் திரு.வேதநாயகம் தந்தியன் கெளரவத்தலைவராக உரையாற்றினார். மலேசியத் தமிழ் மக்கள்,இலங்கைத் தமிழர்களுக்குக் கடந்த காலங்களிற் செய்த உதவிகளுக்குக் கல்லாறு திரு.சதீஷால் நன்றி கூறப்பட்டது.
விழாவில் “மந்திரக்கணங்கள்”நூலின் ஆய்வுரையைப் பிரதம விருந்தினர் பேர்ன் வள்ளுவன் பாடசாலை அதிபர் பூநகரியான் திரு.பொன்னம்பலம் முருகவேள் வழங்க,மதிப்புரையைப் பிரதம விருந்தினர் விரிஎஸ் நிறுவனத் தலைவர் திரு.கந்தசாமி விநாயகமூர்த்தி (கவிஞர்.கவி குமார்)நிகழ்த்தினார்.
தொடர்ந்து விழாவின் கெளரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்ட உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டின் சுவிஸ் தலைவர் ஶ்ரீ இராசமாணிக்கம்,கல்வியாளர் அருந்தவராஜா கந்தையா,மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி சுவிஸ் பக்திபீடத்தலைவர் திரு.சுரேஷ் செல்வரட்ணம்,ஊடகவியலாளர் திரு.சண் தவராஜா,தமிழ் நாடகக் கல்லூரியின் சுவிஸ் தலைவர் திரு.அன்ரன் பொன்ராஜா,34 தமிழ் அமைப்புகளின் பிரதிநிதியும்,இந்து மகாசபையின் சுவிஸ் தலைவருமான ஆசிரியர் திரு.கணபதிப்பிள்ளை கணா ,சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் பொருளாளர் இணுவையூர் திரு.மயூரன்,ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினார்கள்.
மேலும்;சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தசுவிஸ் இந்து மகா சபைப் பொருளாளர் கவிஞர் அருள் நந்தன்,சுவிஸ் தமிழ் ஊடக மன்றத் தலைவர் ஜெராட் ஜெயவீரசிங்கம்,மின்னல் 24 ஊடகத்தலைவர் சந்திரசேகரம் சந்திரப்பிரகாஷ்,கல்வியாளர் திருமதி.கோகிலா தவராஜா,கல்வியாளர் திருமதி.நந்தினி முருகவேள்,ஊடகப் பிதாமகன் மதிப்பிற்குரிய ஜீவேந்திரன்,சமூக ஆர்வலர்கள் பிறைசூடி தம்பதியினர்,சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் பொருளாளர் அசோக் லூயிஸ் ஆகியோர் நூல்களை வழங்கி வைக்க, ,ஹவுஷ் மாஷ்ரர் நிறுவன அதிபர் திரு.உதயன்,சூர் அல்ரன் தவர்னே நிறுவன அதிபர் பஞ்சாட்சரம் ஶ்ரீகாந்தன் இந்துமதி தம்பதி,சுவிஸ் ஐ.ரி.ஆர் வானொலி நிறுவன அதிபர் ஜெனோகரன் ஜெனார்த்தன் தம்பதி,பொறியியலாளர் திரு.நடேசலிங்கம் சித்ரவேல்,கல்வியாளர் திரு.அருணாசலம் திலக்குமார்,சமூக ஆர்வலர்கள் தர்மலிங்கம் பிரபாகரன் அஞ்சலா தம்பதிகள்,சமூக ஆர்வலர் ,நூலாசிரியர், பொலிகை திரு.ஜெயா,கவிஞர் கதிர் லோகன் ,புகைப்படக் கலைஞர் அமரதாஸ்,லுசேர்ன் கவிஞர் திரு.ரவி,பிள்ளையார் மணவறை திரு.இராதாகிருஸ்ணன் உட்பட பலர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.
பூநகரியான் முருகவேள் பொன்னம்பலம் மந்திரக்கணங்கள் நூலாசிரியருக்குப் பொன்னாடை போற்றிக் கெளரவித்ததுடன் பூமாலையும் சூட்டி வாழ்த்தையும்தெரிவித்தார்.சுரேஷ் செல்வரட்ணம் மந்திரக்கணங்கள் நூலாசிரியர் பெருமாள் இராஜேந்திரன் தம்பதியினருக்குப் பொன்னாடை போற்றிக் கெளரவித்தார்.
சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கம் ,நூலாசிரியர் திரு.பெருமாள் இராஜேந்திரன் அவர்களுக்கு நிறை தமிழ் என்று விருது வழங்கிக் கெளரவித்தது.சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கம் தனி விழா எடுத்து விருது வழங்கும் ஆறாவது நிகழ்வு இது என்று அதன் தலைவர் கல்லாறு சதீஷ் விருதுரையில் குறிப்பிட்டார்.
அன்ரன் பொன்ராஜா,கந்தையா அருந்தவராஜா,சண் தவராஜா,அமரதாஷ் ,பூநகரியன் பொன்னம்பலம் முருகவேள்,ஆகியோர் தங்களுடைய நூல்களை பெருமாள் இராஜேந்திரனுக்கு பரிசாக வழங்கிக் கெளரவித்தனர்.
முனைவர் நாகேஸ்வரன் அருள்ராசா எனும் எழுத்தாளர் கல்லாறு சதீஷைத் தலைவராகக் கொண்டு கடந்த பத்தாண்டுகளாக இயங்கும்,சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கம் இந்த விழாவை மிகக் கச்சிதமாக ஏற்பாடு செய்திருந்தது.
விழாவில் காலை உணவு,செவிக்கு அறிஞர்களின் உரை,மதிய விருந்து,என்று ஒரு ஞாயிறு ஓய்வு நாள் வாழ்வில் தேக்கி வைக்கும் பொன்நாளாக “மந்திரக் கணங்கள்”நூல்அறிமுக விழா நிறைவடைந்தது.இறுதியாக கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் நூலான மகாகவிதை,கவிஞர் ரவி,மற்றும் நவீன சங்கப் புலவர் அருள் நந்தன் ஆகியோருக்கு கவிப்பேரரசுவின் நண்பர்களான கல்லாறு சதீஷ்,இராஜேந்திரன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட விழா மகிழ்ச்சியுடன் நிறைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |