ஜேர்மனியின் சாதனை கேப்டன் ஓய்வு! ரசிகர்கள் வருத்தம்
ஜேர்மனி கால்பந்து அணியின் கோல் கீப்பர் மானுவல் நியூயர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.
உலகக்கிண்ணத்தை வென்றதில் முக்கிய பங்கு
2009ஆம் ஆண்டில் அறிமுகமான 38 வயதான கோல் கீப்பர் மானுவல் நியூயர், ஜேர்மனி அணிக்கு 61 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார்.
ஜேர்மனி அணி 2014ஆம் ஆண்டில் உலகக்கிண்ணத்தை வென்றதில் நியூயர் முக்கிய பங்கு வகித்தார். அத்துடன் அப்போது சிறந்த கோல் கீப்பராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.
அதேபோல் கிளப் மட்டத்தில் சாத்தியமான ஒவ்வொரு கிண்ணத்தையும் நியூயர் வென்றுள்ளார். இவர் 2012 முதல் 2014 வரை 48 போட்டிகளில் தோல்வியடையாமல் தொடர்ந்தார். இது பாரிய கோல் கீப்பரின் சாதனையாகும்.
மேலும், Bayern Munich ஜாம்பவானான நியூயர் கால்பந்து வரலாற்றில் இருமுறை ஐரோப்பிய Treble வென்ற ஒரே கோல்கீப்பர் ஆவார்.
சிறந்த ஆடவர் கோல் கீப்பர்
கால்பந்து வரலாற்றில் நான்கு தொடர்ச்சியான IFFHS உலகின் சிறந்த ஆடவர் கோல் கீப்பர் விருதுகளை வென்ற ஒரே கீப்பர் நியூயர்தான்.
இந்த நிலையில் நியூயர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஜேர்மனி அணிக்காக 124 போட்டிகளிலும், பாயர்ன் முனிச் அணிக்காக 345 போட்டிகளிலும் நியூயர் விளையாடியுள்ளார்.
மானுவல் நியூயரின் ஓய்வு அறிவிப்பு ஜேர்மனி ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |