பிரான்ஸ் நிறுவன விமானங்களில் இந்தியா திரும்பிய பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை...
ஏர் பிரான்ஸ் விமானங்கள் மூலம் இந்தியா வந்த பயணிகள் பலர் ஒரு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார்கள்.
கடந்த இரண்டு வாரங்களில் இந்தியாவின் பெங்களூருவிலுள்ள Kempegowda சர்வதேச விமான நிலையத்துக்கு ஏர் பிரான்ஸ் விமானங்கள் மூலம் வந்தடைந்த பலருடைய உடைமைகள் இன்னமும் அவர்களை வந்தடையவில்லை.
பலமுறை விமான நிலையத்துக்குச் சென்று தங்கள் உடைமைகள் குறித்து விசாரித்தும், இதுவரை அவர்கள் யாருக்கும் உள்ளூர் விமான நிலைய பிரதிநிதிகளிடமிருந்து பயனுள்ள எந்த தகவலும் கிடைக்கவில்லையாம்.
விசாரித்ததில், பாரீஸில் விமான நிலைய ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பயணிகளின் பொருட்களை அனுப்புவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும், ஆகவே, பயணிகள் தங்கள் உடைமைகளை பெற்றுக்கொள்ள மேலும் சில நாட்கள் காத்திருக்கவேண்டியிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.