தண்ணீரில் எலுமிச்சை போட்டு வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?
சாதாரணமாகவே எலுமிச்சை திருஷ்டிக்காகவோ சகுணம் பார்ப்பதற்காகவோ பயன்படுத்துவர்.
வீடுகளில் வியாபாரஸ்தலங்களில் எலுமிச்சையை கட்டி தொங்கவிட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும்.
சகுணம் பார்த்தல் அதுமட்டுமில்லாது இன்றைய நாள் எவ்வாறு அமையப்போகிறது என கணித்தல் போன்ற காரியங்களுக்காக இவ்வாறு செய்வது ஒரு நம்பிக்கையாக இருக்கிறது.
ஒரு எலுமிச்சையைக்கொண்டே நாள் சிறப்பானதாக அமையுமா?அல்லது சாதாரணமாக இருக்குமா?என நமது பெரியோர்கள் கூறி விடுவார்களாம்.
சாதாரணமாகவே எலுமிச்சைக்கு நேர்மறை ஆற்றலிருக்கிறது என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றது. அதிலும் இதனை தண்ணீரோடு சேர்ப்பதன் மூலம் பல நன்மைகளை வழங்குகின்றது.
ஏனெனில் தண்ணீருக்கு சூழலில் நடக்கும் விடயங்களுக்கேற்ப மாறும் தன்மை இருப்பதனால் அவை இரண்டும் சேர்ந்து நேர்மறை சக்தியை கொடுக்கிறது.
எலுமிச்சை தண்ணீரோடு சேர்ப்பதனால் என்ன நடக்கும்?
- எலுமிச்சை நீரோடு சேர்த்து வைப்பதனால் அதிலிருந்து கிடைக்கும் நேர்மறை ஆற்றல் அந்த இடத்திலே உண்டாகும் தீய அதிர்வை தடுக்கிறது. இது விஞ்ஞானப்பூர்வமாகவும் மற்றும் ஆன்மிகரீதியாகவும் உண்மையாகும்.
- அதாவது எலுமிச்சை மேலே இருந்தால் நமக்கு சாதகமானதாகவும் எலுமிச்சை அடியிலே இருந்தால் நாள் சுமாரானதாகவும் இருக்குமாம்.
- உண்மையிலேயே சகுணங்கள் நமக்கு பலதையும் உணர்த்தக்கூடியவை. உதாரணமாக பார்த்தால் ஒரு இடர் வரும்முன்னே சாதாரணமாக பறவைகள் விலங்குகளால் அறிய முடியும் அது போல இயற்கையோடு ஒத்த எலுமிச்சையைக்கொண்டே இவற்றை அறிந்துக்கொள்ளலாம் என கூறுகின்றனர்.
- வீடுகள் மற்றும் வியாபாரஸ்தலங்களிலே இவ்வாறு எலுமிச்சைப்பழத்தை வைத்திருப்பர். அவற்றைக்கொண்டு சகுணங்களை அறியமுடியும்.இந்த தண்ணீர் நிறைந்த எலுமிச்சையை வீட்டிற்கு வருவோரின் பார்வையில் படுமாறு வைத்துவிடவேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது மாற்றிவிடவேண்டும்.