ஜேர்மனியில் கூட்டத்துக்குள் புகுந்த கார்: 4 முதல் 5 பேர் வரை காயம்
A BMW was driven deliberately into a group of people in Germany, leaving four to five of them with injuries: ஜேர்மனியில் மக்கள் கூட்டத்துக்குள் ஒரு கார் புகுந்த நிலையில், நான்கு முதல் ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள்.
ஜேர்மனியின் லோயர் சாக்சனி மாகாணத்திலுள்ள Neustadt am Rübenberge என்னுமிடத்தில், மக்கள் கூட்டத்துக்குள் கார் ஒன்று பாய்ந்துள்ளது.
கூட்டத்துக்குள் புகுந்த கார்
அந்த காரிலிருந்தவர்கள் வேண்டுமென்றே பொதுமக்கள் மீது காரை மோதியதாகக் கூறப்படும் நிலையில், பொலிசார் தலையிட்டதால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிசார் அந்த காரிலிருந்தவர்களை துப்பாக்கியால் சுட, அவர்கள் காரிலிருந்து இறங்கி தப்பியோடியுள்ளார்கள்.
கார் மோதியதில், நான்கு முதல் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர், என்றாலும், அவர்கள் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தப்பியோடியவர்களை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.