பிரித்தானியாவில் பல உருமாறிய வைரஸ்கள் பரவும்! முன்னாள் துணை தலைமை மருத்துவ அதிகாரி எச்சரிக்கை
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் முன்னேற்றம் அடையும் போது மேலும் பல உருமாறிய வைரஸை எதிர்கொள்வோம் என்று இங்கிலாந்தின் முன்னாள் துணை தலைமை மருத்துவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் எந்த சர்வதேச பயண தொடர்பும் இல்லாத 11 பேருக்கு தென் ஆபிரிக்கா கொரோனா தொற்று உறுதியானது.
தென் ஆபிரிக்கா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய 8 பகுதிகளில் வீட்டிற்கு வீடு கொரோனா சோதனை மேற்கொள்ளும் திட்டத்தை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், பிரித்தானியாவில் தொடர்ந்து கட்டுப்பாடுகளை அமுல் வைத்திருக்க வேண்டும் என இங்கிலாந்தின் முன்னாள் துணை தலைமை மருத்துவ அதிகாரியும் பேராசிரியருமான Gina Radford தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான பீதி இல்லை, ஏனென்றால் தடுப்பூசி விநியோகம் மற்றும் தேசிய ஊரடங்கு ஆகிய ஆயுதங்கள் நம்மிடம் உள்ளன.
ஆனால் அதிகமான தொற்றுகள் உள்ளன மற்றும் பல வைரஸ்கள் குறிப்பாக உருமாறிய புதிய வகை வைரஸ்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதனால் இதை நாம் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என Gina Radford தெரிவித்துள்ளார்.