உலகப் புகழ் பெற்ற சுவிட்சர்லாந்தில் பலருக்கு ஆங்கிலம் தெரியாதாம்: ஒரு ஆச்சரிய தகவல்
சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற சுவிட்சர்லாந்து, ஆங்கிலம் பேசுவதில் ஐரோப்பா மட்டத்தில் 23ஆவது இடத்திலும், உலக அளவில் 29 இடத்திலும் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆய்வமைப்பு ஒன்று உலகம் முழுவதிலுமுள்ள 111 நாடுகளின் ஆங்கில அறிவு குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.
ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் தகவல்
சுவிட்சர்லாந்து, ஆங்கிலம் பேசுவதில், உலக அளவில் 29ஆவது இடத்தில் உள்ளதுடன், அது செர்பியாவுக்கும் நைஜீரியாவுக்கும் பின்னால் உள்ளது.
மேலும், சுவிஸ் பெண்கள் ஆங்கிலம் பேசுவதில் ஆண்களைவிட பின்தங்கி உள்ளார்களாம். பெண்கள் சராசரிக்கும் சற்று கீழேயும், ஆண்கள் சரசரிக்கு சற்று மேலேயும் உள்ளார்கள்.
18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடையில் உள்ளவர்கள், 31 வயது மற்றும் அதற்கு அதிகம் உள்ளவர்களைவிட ஆங்கிலம் பேசுவதில் குறைவான திறன் உடையவர்களாக இருக்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.
காரணம் என்ன?
இப்படி சுவிட்சர்லாந்து மக்கள் ஆங்கிலத்தில் பின்தங்கியுள்ளதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்கள் வெளிநாட்டு மொழிகளை படிப்பதற்கு முன், மற்றொரு தேசிய மொழியான ஜேர்மன், பிரெஞ்சு அல்லது இத்தாலிய மொழியை கற்றுக்கொள்ள முடிவெடுப்பதுதான்.
இன்னொரு விடயம், சுவிஸ் பள்ளிகளில் துவக்கப் பள்ளி பாடத்திட்டத்தில் ஆங்கிலம் இல்லாமலிருப்பதும்தான் என்கிறது பிரபல சுவிஸ் ஊடகம் ஒன்று!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |