துணிக்கடையில் வேலை செய்தவர்.., இன்று Manyawar பிராண்டை உருவாக்கி ரூ.32,000 கோடிக்கு அதிபதி
13 வயதில் துணிக்கடையில் வேலை செய்த ஒருவர் இன்று, பிராண்ட் கடைகளை அமைத்து பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார்.
யார் அவர்?
பொதுவாக விழாக்காலங்கள், திருமணம் என்றாலே நினைவுக்கு வருவது துணிக்கடை தான். எல்லோருக்கும் துணி எடுக்க வேண்டும் தான் அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டு இருக்கும். தற்போது மக்களிடையே நினைவுக்கு வரும் பிராண்டு மான்யவார் (Manyawar) தான்.
இந்த பிராண்டின் வெற்றிக்கு காரணமானவர் ரவி மோடி (Ravi Modi). மான்யவார், மோஹி, மந்தன், மெபாஸ், டிவாமெவ் என்ற பல பிரபலமான பிராண்டுகளை உருவாக்கியவர் ரவி மோடி தான்.
2022 -ம் ஆண்டு பங்குச்சந்தையில் தனது நிறுவனத்தை பட்டியலிட்ட ரவி மோடி, இந்திய பணக்காரர்களில் ஒருவராக மாறினார். இவர் தனது தந்தையின் துணிக்கடையில் 13 வயதிலேயே சேல்ஸ் மேனாக பணியாற்றினார். பின்னர், கடையின் பொறுப்பையும் எடுத்துக் கொண்டார்.
இதனையடுத்து, தனது தாயிடம் இருந்து ரூ.10,000 கடன் பெற்று, வேதாந்த் பேஷன்ஸ் (vedant fashions) என்ற நிறுவனத்தைத் தனது மகன் பெயரில் கொல்கத்தாவில் 2022 -ம் ஆண்டு தொடங்கினார்.
பின்னர், இந்திய ரக ஆடைகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தினார். Manyawar என்ற பிராண்டையும் பிரபலப்படுத்தினார்.
இவரது வியாபார வளர்ச்சியால், பிரத்யேக பிராண்டு கடைகளை அமைத்து தனது தயாரிப்புகளை விற்கத் தொடங்கினார்.
ரூ.32,000 கோடிக்கு அதிபதி
தற்போது, Manyawar பிராண்டானது திருமண ஆடை பிராண்டாக மாறியுள்ளது. ஆண்களுக்கான குர்தாக்கள், ஷெர்வானிகள், ஜாக்கெட்டுகள், பெண்களுக்கான லெஹெங்காக்கள், புடவைகள் என பல ஆடைகளுக்கு பிரபலமாகியுள்ளது.
மேலும், Virat Kohli, Anushka Sharma, Ranveer Singh, Alia Bhatt ஆகிய பிரபலங்களுடன் Manyawar பிராண்டு புகழ் பரவியுள்ளது.
தற்போது, vedant fashions நிறுவனமானது இந்தியாவில் 248 நகரங்களில் 662 கடைகளிலும், 16 சர்வதேச கடைகளிலும் உள்ளது.
ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி இந்தியாவின் பணக்காரர்களில் 64 வது இடத்தில் 28,000 கோடி நிகர மதிப்புடன் உள்ளார். அதோடு, vedant fashions நிறுவனத்தின் மதிப்பு தற்போது ரூ.32,000 கோடியாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |