உடலிற்கு ஆரோக்கியமான மாப்பிள்ளை சம்பா இட்லி: எப்படி செய்வது?
பொதுவாகவே தென்னிந்தியர்களின் வீடுகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி மற்றும் தோசை தான் உணவாக இருக்கும்.
அந்தவகையில், உடலிற்கு ஆரோக்கியத்தை வழங்கும் மாப்பிள்ளை சம்பா இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மாப்பிள்ளை சம்பா அரிசி - 6 கப்
- பச்சரிசி - 2 கப்
- உளுந்து - 1 கப்
- வெந்தயம் - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் மாப்பிள்ளை அரிசி மற்றும் பச்சரிசியை நன்கு கழுவி 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து முதலில் ஊற வைத்துள்ள வெந்தயம் மற்றும் உளுந்தை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஊற வைத்துள்ள அரிசியை அவ்வப்போது சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கடுத்து அரிசி மற்றும் உளுந்து மாவு இரண்டையும் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இறுதியாக மாவு புளித்து வந்ததும் இட்லி பாத்திரத்தில் இட்லியை ஊற்றி வேக வைத்து எடுத்தால் ஆரோக்கியமான மாப்பிள்ளை சம்பா இட்லி ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |