கேரளா ஸ்டைல் சத்தான மரவள்ளிக்கிழங்கு இட்லி: எப்படி செய்வது?
தென்னிந்திய மாநிலங்களில் இட்லி மிகவும் பிரசிதிப்பெற்றது என்று தான் கூற வேண்டும்.
இதில் கொஞ்சம் மாற்றத்தோடு வித்தியாசமான முறையில் இட்லி செய்து சாப்பிட வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள்.
அந்தவகையில், கேரளா ஸ்டைல் சத்தான மரவள்ளிக்கிழங்கு இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி - 2 கப்
- பச்சரிசி - 1 கப்
- மரவள்ளி கிழங்கு - 3
- உளுந்தம்பருப்பு - ¼ கப்
- உப்பு - சுவைக்கு ஏற்ப
செய்முறை
முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் இட்லி அரிசியை கழுவி 4 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
பின்னர் மரவள்ளி கிழங்கை தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
நான்கு மணி நேரத்திற்குப் பிறகு ஊற வைத்த அரிசி மற்றும் உளுத்தம்பருப்பை கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
இதையடுத்து பொடியாக நறுக்கி வைத்துள்ள மரவள்ளி கிழங்குகளை தண்ணீர் சேர்த்து தனியாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அரைத்த மாவுடன் உப்பு மற்றும் மரவள்ளி கிழங்கு அரைத்த கலவையை சேர்த்து நன்கு கலந்து 6 மணி நேரத்திற்கு புளிக்க வைக்கவும்.
இறுதியாக வழக்கமாக இட்லி சுடுவது போன்று 10 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்தால் போதும் சுவையான மரவள்ளி கிழங்கு இட்லி ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |