சத்தான மரவள்ளிக்கிழங்கு முறுக்கு: எப்படி செய்வது?
மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது.
இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது.
இவ்வளவு சத்து மிகுந்துள்ள மரவள்ளிகிழங்கை பயன்படுத்தி முறுக்கு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- மரவள்ளிக் கிழங்கு - 1/2 கிலோ
- பச்சரிசி மாவு - 1/4 கிலோ
- இஞ்சி - சிறிதளவு
- பச்சை மிளகாய் - 10
- ஓமம் - 2 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- வெண்ணெய்- 100 கிராம்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து மேல் தோலை நீக்கிவிட்டு துருவிக்கொள்ள வேண்டும்.
இஞ்சி, பச்சை மிளகாய், ஓமம் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து மரவள்ளிக் கிழங்கு, அரிசி மாவு, அரைத்த விழுது, உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். மிதமான தீயில் வைக்கவும்.
இப்போது முறுக்கு அச்சில் எண்ணெய் பூசி அதில் மாவைப்போட்டு முறுக்குகளாக எண்ணெய்யில் பிழிந்து விடவும்.
மொறு மொறு என்று சிவப்பு பதத்திற்கு வந்தவுடன் எடுத்தால் ஆரோக்கியமான, சுவையான மரவள்ளிக் கிழங்கு முறுக்கு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |