அசுர வேகம்... மார்கஸ் ராஷ்ஃபோர்ட் வாகனம் ஓட்ட தடை
மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திரம் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் தமது வாகனத்தில் மின்னல் வேகத்தில் பாய்ந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளார்.
வாகனம் ஓட்ட தடை
தனது Rolls-Royce வாகனத்தில் மணிக்கு 104 மைல்கள் வேகத்தில் பயணித்த நிலையிலேயே மார்கஸ் ராஷ்ஃபோர்ட் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளார்.
26 வயதான மார்கஸ் ராஷ்ஃபோர்ட் M60 பிரதான சாலையில் 560,000 பவுண்டுகள் மதிப்பிலான தனது Cullinan Blue Shadow Rolls-Royce வாகனத்தில் பயணிப்பதை பொலிஸ் கார் ஒன்று கண்காணித்துள்ளது.
இதற்கு முன்னரும் இதுபோன்ற நடவடிக்கையில் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் சிக்கியுள்ளார். தற்போது அவருக்கு 6 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 1,666 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ரோந்து வாகனம் ஒன்று, இவரது வாகனத்தை சம்பவத்தின் போது கண்காணித்துள்ளதாக மான்செஸ்டர் மற்றும் சால்போர்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற விசாரணையில் காணொளி ஊடாக கலந்துகொண்ட ராஷ்ஃபோர்ட், தம்மை ஒரு வாகனம் பின் தொடர்வதை உணர்ந்து, அந்த அச்சத்தில் வேகமெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
விபத்திலும் சிக்கியுள்ளார்
ஆனால், ரோந்து பொலிசார் தங்கள் வாகனத்தில் அவசர விளக்கை பொருத்தும் முன்னர் பிரதான சாலையில் இருந்து ராஷ்ஃபோர்ட் வெளியேறியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, அதிக வேகத்தில் பயணித்து ஒருமுறை தனது Rolls-Royce வாகனத்துடன் விபத்திலும் சிக்கியுள்ளார்.
சொந்தமாக மூன்று Rolls-Royce வாகனங்கள் இவருக்கு உள்ளது. Black Badge Wraith, Black Badge Cullinan மற்றும் Cullinan Blue Shadow.இது மட்டுமின்றி, McLaren 765 Long Tail மற்றும் Lamborghini Urus Performante ஆகிய கார்களும் இவரிடம் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |