ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளும் பிரித்தானிய கால்பந்து நட்சத்திரம் மார்கஸ் ராஷ்ஃபோர்ட்
மான்செஸ்டர் யுனைடெட் அணி பயிற்சி அமர்வுகளில் கலந்துகொள்ள தொடர்ந்து தவறுவதாகவும், இரவு நேர கொண்டாட்டங்களில் அதிக கவனம் செலுத்துவதாகவும் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் மீது புகார் எழுந்துள்ளது.
ராஷ்ஃபோர்ட் விவகாரம்
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகத்திடம் தமது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக கூறியுள்ள நிலையில், பல மணி நேரத்திற்கு முன்பு அவர் இரவு நேர விடுதி ஒன்றில் காணப்பட்டுள்ளார்.
@getty
ஞாயிறன்று முக்கியமான ஆட்டம் ஒன்று இருக்க, ராஷ்ஃபோர்ட் விவகாரம் அணி மேலாளரான Erik ten Hag-க்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
புதன்கிழமை பயிற்சி அமர்வுகளில் கலந்து கொண்ட ராஷ்ஃபோர்ட், அதே நாள் மதியத்திற்கு மேல் இரவு விடுதி ஒன்றில் காணப்பட்டுள்ளார். மட்டுமின்றி, தமது நண்பரும் கால்பந்து வீரருமான Ro-Shaun Williams என்பவரை சந்திக்கும் பொருட்டு வடக்கு அயர்லாந்துக்கு ராஷ்ஃபோர்ட் பயணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒழுங்கு நடவடிக்கை
வியாழக்கிழமை Thompsons இரவு விடுதியில் காணப்பட்டுள்ளார். அடுத்த நாள் பகல் தனியார் விமானம் ஒன்றில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். ஆனால் வெள்ளிக்கிழமை பயிற்சி அமர்வுக்கு முன்பு Erik ten Hag தெரிவிக்கையில், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ராஷ்ஃபோர்ட் பயிற்சியில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.
@getty
தற்போது ராஷ்ஃபோர்ட் தொடர்பான தகவல்கள் அனைத்தும் அம்பலமான நிலையில், அவர் அணி நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |