மிக மோசமான கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்தின் பிரபல கால்பந்து நட்சத்திரம்
மான்செஸ்டர் யுனைடெட் அணி நட்சத்திரமான மார்கஸ் ராஷ்போர்ட் மிக மோசமான கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தின் அதிர்ச்சியில்
பர்ன்லி அணிக்கு எதிரான ஆட்டம் முடித்து குடியிருப்புக்கு திரும்பும் வழியிலேயே மார்கஸ் ராஷ்போர்ட்டின் 700,000 பவுண்டுகள் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் விபத்தில் சிக்கியுள்ளது.
Credit: Zenpix
யுனைடெட் அணியின் Carrington முகாமில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் அவரது கார் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ராஷ்போர்ட் காயங்கள் இன்றி தப்பியதாகவும், இருப்பினும் விபத்தின் அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், கைது நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், ஆம்புலன்ஸ் சேவையும் பயன்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.
Credit: Eamonn and James Clarke
நேரம் வரவில்லை என ராஷ்போர்ட்
ராஷ்போர்டுக்கு சொந்தமாக மூன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் Black Badge Wraith தற்போது விபத்தில் சிக்கியுள்ளது. இன்னொன்று 390,000 பவுண்டுகள் மதிப்பிலான Black Badge Cullinan.
மேலும், கடந்த மாதம் 560,000 பவுண்டுகள் மதிப்பிலான Cullinan Blue Shadow ஒன்றையும் வாங்கியிருந்தார். அத்துடன் சமீபத்தில் தான் 280,000 பவுண்டுகள் மதிப்பிலான McLaren 765 Long Tail வாங்கினார்.
@getty
மேலும் அவரிடம் 350,000 பவுண்டுகள் மதிப்பிலான Lamborghini Urus Performante காரும் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் அணியில் தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்தவர்களில் மார்கஸ் ராஷ்போர்டும் ஒருவர் எனக் கூறப்படுகிறது. அதற்கான நேரம் வரவில்லை என மார்கஸ் ராஷ்போர்ட் பதிலளித்ததாக கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |