8 சிக்ஸர்கள் விளாசி ருத்ரதாண்டவம்: 89 ஓட்டங்கள் குவித்த வீரர்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக 89 ஓட்டங்கள் விளாசினார்.
மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. நாணய சுழற்சியில் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்ததைத் தொடர்ந்து, லக்னோ அணி முதலில் துடுப்பாடியது.
தொடக்க வீரர்களான ஹூடா (5), டி காக் (16) சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், மான்கட் முதல் பந்திலேயே வெளியேறினார்.
ஸ்டோய்னிஸ் ருத்ர தாண்டவம்
பின்னர் களமிறங்கிய க்ருனால் பாண்ட்யா, மார்கஸ் ஸ்டோய்னிஸ் இணை நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடியது. க்ருனால் 49 ஓட்டங்களில் இருந்தபோது ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
That's what you call reaching your fifty in style! ?pic.twitter.com/QxjxjKA6NM
— Lucknow Super Giants (@LucknowIPL) May 16, 2023
அதன் பின்னர் அதிரடியில் மிரட்டிய ஸ்டோய்னிஸ் சிக்ஸர்களை தெறிக்க விட்டார்.
ருத்ர தாண்டவம் ஆடிய ஸ்டோய்னிஸ் 47 பந்துகளில் 8 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் லக்னோ அணி 177 ஓட்டங்கள் எடுத்தது.