வாயில் நுரை, இதயவலியால் துடிதுடித்த மாரிமுத்து- மருத்துவரின் பேட்டி
பிரபல நடிகரும், இயக்குனருமான மாரிமுத்துவின் திடீர் மரணம் திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அவருக்கு கடைசியாக சிகிச்சையளித்த மருத்துவர் ஆனந்தகுமார் சன் டிவிக்கு அளித்த பேட்டியில், அன்றைய தினம் காலை 8.30 மணியளவில் கார் ஓட்டிக்கொண்டு சூர்யா மருத்துவமனைக்கு வந்தார்.
காரில் இருந்து அவரால் இறங்கமுடியவில்லை, உடனடியாக ஊழியர்கள் அவரை இறக்க முயன்ற போது உடல் முழுவதும் வேர்த்திருந்தது.
நெஞ்சு வலியால் அவதிப்பட்டார், நெஞ்சை பிடித்துக்கொண்டே கீழே இறங்கினார், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தோம்.
நாடித்துடிப்பும் மோசமாக இருந்தது, அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டது, 15 முதல் 20 நிமிடம் என்ன செய்ய முடியுமோ அதை செய்தோம்.
4 முறை ஷாக் கொடுத்தும் மீட்க முடியவில்லை, வாயில் நுரை தள்ளியது, குடும்பத்தினருக்கு தகவல் அளித்ததில் மனைவி, மகள், தம்பி வந்தார்கள்.
அவர்களிடம் அனைத்தையும் விளக்கினோம், கடைசியில் எதுவுமே முடியாமல் போனது, மாரடைப்பு எப்போது வரும் என்று சொல்ல முடியாது.
அவருடைய பழைய மருத்துவ ரெக்கார்டு பார்த்ததில், அவருக்கு இரு ஸ்டெண்ட் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதற்கான மாத்திரையும் எடுத்துக்கொண்டிருப்பார், சர்க்கரை வியாதியும் இருப்பதால் உடலை அதிகம் வருத்திக் கொண்டாரா என்பது தெரியவில்லை, இதனாலும் மாரடைப்பு வந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.