இறப்பை முன்கூட்டியே கணித்தாரா மாரிமுத்து: அடிக்கடி மனதில் வலி என்று பரவும் வீடியோ
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை உயிரிழந்த நிலையில் அவர் சீரியலில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
எதிர்நீச்சல் மாரிமுத்து மரணம்
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை 6 மணி முதல் 1 மணி நேரம் வரை டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அறையில் புழுக்கம் இருந்ததாக கூறி வெளியில் வந்துள்ளார்.
பின்னர், அசௌகரியம் ஏற்பட்டதால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு, அவர் சிகிச்சையில் இருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்தார். இச்சம்பவம், திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
'மனதில் வலி' வீடியோ
இந்நிலையில், மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவருடைய ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோவில் அவர், "அடிக்கடி மனதில் வலி வருகிறது. அது நெஞ்சுவலியா அல்லது மன வலியா எனத் தெரியவில்லை. ஏதோ கெட்டது நடக்கப் போகிறது எனத் தோன்றுகிறது" என்று பேசியுள்ளார்.
அவர், சீரியலில் பேசியது உண்மையாக நடந்த நிலையில் தன்னுடைய மரணத்தை மாரிமுத்து முன்கூட்டியே கணித்துள்ளார் என்று பேசப்பட்டு வருகிறது.
??#RIPMarimuthu pic.twitter.com/uQ1T2AREj3
— RamKumarr (@ramk8060) September 8, 2023
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |