சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த என்னை ஜனாதிபதியாக்குங்கள்: மரீன் லெ பென்
Marine Le Pen, France’s far-right candidate, launches presidential bid: பிரான்ஸ் வலதுசாரிக் கட்சியைச் சார்ந்த மரீன் லெ பென், தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளார்.
பிரான்ஸ் போராட்டங்களால் கலவர பூமியாகியுள்ள நிலையில், அதை தனக்கு சாதமகாக பயன்படுத்திக்கொள்ள முயல்கிறார் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்.
என்னை ஜனாதிபதியாக்குங்கள்...
ஆம், பிரான்ஸ் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான நேஷனல் ராலி கட்சியைச் சார்ந்த மரீன் லெ பென் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளார்.

என்னை ஜனாதிபதியாக்கினால் சட்டத்தின் ஆட்சியை மீட்டுக் கொண்டுவருவேன் என்று கூறியுள்ளார் மரீன் லெ பென்.
வேறு வகையில் கூறினால், தன்னை மக்கள் தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதாக உறுதியளித்துள்ளார் மரீன் லெ பென்.
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்து மரீன் லெ பென்தான் ஜனாதிபதியாவார் என கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன.
இந்நிலையில், ஜனாதிபதியாவதற்கான நடவடிக்கைகளை முறைப்படி துவங்கியுள்ள மரீன் லெ பென், நேற்று, அதாவது, அக்டோபர் மாதம் 25ஆம் திகதி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளார்.