பிரான்சில் முன்னிலை வகிக்கும் தீவிர வலதுசாரிக் கட்சி: வெளிநாட்டவர்கள் நிலை என்ன?
Marine Le Pen has reaffirmed that national priority for French citizens for public services: அரசு வழங்கும் உதவிகளில், பிரெஞ்சுக் குடிமக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என மரீன் லெ பென் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்து யார் ஜனாதிபதியாவார் என்பது தொடர்பான கருத்துக்கணிப்புகளில், தீவிர வலதுசாரிக் கட்சியான National Rally கட்சியைச் சேர்ந்த மரீன் லெ பென்னே முன்னிலை வகிக்கிறார்.
முன்னிலை வகிக்கும் தீவிர வலதுசாரிக் கட்சி
இந்நிலையில், தேர்தலில் National Rally கட்சி வெற்றிபெறுமானால், பிரெஞ்சு மக்களுக்கே பிரான்ஸ் நாட்டில் முன்னுரிமை என்னும் நிலைப்பாட்டை தான் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார் அக்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கலாம் என எதிர்பார்க்கப்படும் மரீன் லெ பென்.

தன் கட்சிக் கொள்கைகள் குறித்து உரையாற்றிய மரீன் லெ பென், பிரெஞ்சுக் குடிமக்கள், அவர்கள் என்ன நிறத்தில் இருந்தாலும் சரி, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த நாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய சொந்த நாடான பிரான்சில், அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
குறிப்பாக, மக்களுக்கு வீடுகள் கிடைக்கும் விடயம் குறித்து பேசிய மரீன் லெ பென், பிரெஞ்சு மக்களுக்கே முன்னுரிமை என்று கூறியுள்ளார்.
ஆக, பிரெஞ்சுக் குடிமக்களல்லாத வெளிநாட்டவர்களுக்கு பல சலுகைகள் மறுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், வேலை விடயத்திலும், வேலைக்கு விண்ணப்பிப்பவர் எந்த நாட்டுக் குடிமகன் என பார்த்து, அந்த வேலைக்கு தகுதியான பிரெஞ்சுக் குடிமகன் இருக்கும் நிலையில், பிரெஞ்சுக் குடிமகன் அல்லாதவரை விட, பிரெஞ்சுக் குடிமகனுக்கே வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படும்.
National Rally கட்சி, தீவிர புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட கட்சி. ஆக, அக்கட்சியைச் சார்ந்த மரீன் லெ பென் தேர்தலில் வெற்றி பெற்று பிரான்ஸ் ஜனாதிபதியாவாரானால், அதனால் வெளிநாட்டவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படலாம் என்றே கருதப்படுகிறது.