தேர்தல் வேண்டும்... பிரான்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்
பிரான்சில் நிலவும் குழப்பத்தை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார், பிரான்ஸ் எதிர்க்கட்சித் தலைவர்.
தேர்தல் வேண்டும்...
பிரான்சில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்க்க ஒரே வழி தேர்தல்தான் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் எதிர்க்கட்சித் தலைவரான மரீன் லெ பென் (Marine Le Pen).
பிரான்சில் ஆளும் தற்போதைய அரசின் கொள்கைகள், பொருளாதார தேக்கத்துக்கும், கட்டுப்பாடில்லாத புலம்பெயர்தலுக்கும் வழிவகுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் மரீன்.
ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைக்கவேண்டும், அப்போதுதான் வாக்காளர்கள் நாட்டின் எதிர்காலம் குறித்த தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தமுடியும் என்று கூறியுள்ளார் மரீன்.
ஆகவே, தேர்தல் நடத்தவேண்டும் என்று கூறும் மரீன், பிரான்சில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்க்க சரியான வழி நாடாளுமன்றத்தைக் கலைப்பதுதான் என்றும் கூறியுள்ளார்.
விடயம் என்னவென்றால் வழக்கொன்றில் மரீனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடமுடியாத வகையில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது..
ஆகவே, 2027இல் நடைபெற இருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் மரீன் போட்டியிடமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |