48 வயதான நபரை தீவிரமாக காதலிக்கும் 23 வயது கோடீஸ்வர இளம்பெண்! இருவருக்குமான 25 வயது வித்தியாசம் குறித்து கூறுவது என்ன?
பிலிப்பைன்ஸை சேர்ந்த கோடீஸ்வரியும், நடிகையுமான மாரீஸ் ரேகல் தன்னை விட 25 வயது அதிகமான நபரை தீவிரமாக காதலித்து வருவதாக தெரியவந்துள்ளது.
23 வயதான மாரீஸ் ரேகலின் சொத்து மதிப்பு $5 மில்லியன் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
மாரீஸும், ரிகோ பிளாங்கோ என்ற பாடகரும் காதலித்து வருகின்றனர். ரிகோவுக்கு 48 வயதாகும் நிலையில் அவருக்கும் மாரீஸுக்குமான வயது வித்தியாசம் 25 ஆகும்.
அதிகளவிலான வயது வித்தியாசம் குறித்து விமர்சனம் கிளம்பினாலும் அது குறித்து இருவரும் கவலைப்படவில்லை.
மாரீஸ் கூறுகையில், நானும் ரிகோவும் காதலிப்பது உண்மை தான். வயது வித்தியாசம் என்பது எங்களுக்கு பிரச்சினை கிடையாது.
காதல் இயற்கையாக தான் வரும் என கூறியுள்ளார். ரிகோவுக்கு மாரீஸ் முன்னர் சமூகவலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டார்.
இதற்கு பதில் அளித்த ரிகோ, ஹா ஹா லவ் யூ என பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.