ட்ரம்பால் ஆசியா பக்கம் பார்வையைத் திருப்பும் கனடா
ட்ரம்பின் வரிவிதிப்புகள், உலகின் பெரிய நாடுகள் சிலவற்றை ஆசியா பக்கம் திருப்பிவருகின்றன.

ஆசியா பக்கம் பார்வையைத் திருப்பும் கனடா
சமீபத்தில், பிரித்தானியா வியட்நாமுடன் உறவுகளை மேம்படுத்த திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல, கனடாவும் ஆசியா பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது. ஆம், கனடா பிரதமரான மார்க் கார்னி, இன்று தனது ஆசிய பயணத்தைத் துவக்குகிறார்.
சீனா செல்லும் கார்னி, சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும், கனடாவும் ஒரு வட அமெரிக்க நாடு என்பதால், ஏற்கனவே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மோதல் போக்கு காணப்படும் நிலையில், தாங்கள் அமெரிக்காவுடன் இல்லை என்பதை விளக்க கார்னி கஷ்டப்படவேண்டியிருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
அதே நேரத்தில், கனடா சீனாவிடம் அடிபணிவதுபோன்ற ஒரு தோற்றத்தையும் கார்னி உருவாக்கிவிடக்கூடாது என்கிறார்கள் அவர்கள்.
கனடா கடந்த மாதம் இந்தோனேசியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அத்துடன், பிலிப்பைன்ஸ், மலேசியா தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள கனடா திட்டமிட்டுவருவதாக கனடா வர்த்தகத்துறை அமைச்சரான மனிந்தர் சித்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |