ட்ரம்ப் வரி விதித்தால் பதிலடி கொடுப்போம்: கனடா பிரதமர்
அமெரிக்க ஜனாதிபதி ஏப்ரல் மாதம் 2ஆம் திகதியை, அமெரிக்காவுக்கு விடுதலை நாள் என அறிவித்துள்ளார்.
அதாவது, வெளிநாட்டு பொருட்களை சார்ந்திருப்பதிலிருந்து அமெரிக்காவை விடுவிக்கும் நாள் இன்று என அவர் கருதுகிறார்.
ஆக, இன்று ட்ரம்ப் பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கும் வரிவிதிப்பு இன்று அமுலுக்கு வர உள்ளது.
பல நாடுகள், ட்ரம்பின் வரிவிதிப்புகளை எதிர்கொள்ள தயாராகிவருகின்றன.
இந்நிலையில், கனடாவோ, ட்ரம்ப் வரிவிதிப்புகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என சூளுரைத்துள்ளது.
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூடுதல் வரிகள் விதித்தால், பழிக்குப் பழியாக அமெரிக்கப் பொருட்களுக்கு வரிகள் விதிப்பதன் மூலம் தக்க பதிலடி கொடுப்போம் என கனடா பிரதமரான மார்க் கார்னி கூறியுள்ளார்.